சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டுமோ?!
AVS
கட்டுரைத் தொடர் - 1
அறிமுகம்:
ஆர்ஷ வித்யா சமாஜம் வகுப்புகளில் படிக்கும் ஒரு மாணவன் சில வீடியோக்களையும், பதிவுகளையும், ஃபேஸ்புக் இணைப்புகளையும் சமீபத்தில் எனக்குக் கொடுத்திருந்தான். கேரளாவில் சில மத அடிப்படைவாதிகள், ஜாதி வெறியர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரின் சனாதன தர்ம விரோதப் பேச்சுகளும் பதிவுகளும்தான் இவை. இவர்களின் விமர்சனங்களுக்கு ஃபேஸ்புக்கில் உரிய பதில் கொடுக்க வேண்டும் என அவர் கேட்டார்.
கிடைத்த யூடியூப் உரைகளையும் கட்டுரைகளையும் நான் கவனமாக கேட்டேன். சனாதன தர்மத்தை மிகத் தாழ்த்திப் பேசும் விமர்சனங்கள் இவற்றில் பல இடங்களில் காண முடிந்தது. இவ்வாறு பரப்பும் அனைவருக்கும் உரிய பதில் சொல்லும் முயற்சிதான் இந்தக் கட்டுரைத் தொடர். இந்த ஃபேஸ்புக் பதிவுகள் தனிப்பட்டவை அல்லாததால் நான் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. ஆனாலும் நம் சமூகம் தரும் கருத்துரையாடல் சுதந்திரம், மதப்பிரசார உரிமை, சகிப்புத் தன்மை, மதச்சார்பின்மை ஆகியவற்றின் பெயரில் சனாதன தர்மத்திற்கு எதிரான பொய்ப் பிரச்சாரம் மிகக் கீழ்த்தரமான மொழியில் பேசுபவர்களுக்கு மிதமான முறையிலாவது பதிலளிக்க வேண்டியிருக்கிறது.
கேரளாவில் வளர்ந்து வரும் “இந்துக்-கிறிஸ்தவ நட்பு” உடைக்கவேண்டும் என்ற நோக்கில் “சகோதரனின் கண்ணிலிருக்கும் தூசியை பார்த்து, தன்னுடைய கண்ணிலிருக்கும் மரத்தடியை காணாத” (மத்தேயு 7:4) சில மத பைத்தியக்காரர்களுக்கு அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் பதில் சொல்ல நாம் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறோம்.
கிறிஸ்தவ சகோதரர்களுக்கு:
ஹமாஸ் இஸ்ரேயலில் செய்ததைப் போல “சிறியது கொடுத்து பெரியது வாங்க” என்பதே இவர்களின் திட்டம். முன்பு கேரளாவில் இதே போன்ற சூழலில் ஸ்ரீமத் சட்டம்பி சுவாமிகள் இவர்களுக்கு உரிய பதில் கொடுத்திருந்தார்கள். இந்துக்களின் நூல்களை கேலி செய்யும் தர்க்கம் தங்களின் நூல்களுக்கு வரும்போது பலர் அதை பயன்படுத்தத் தயாராக இல்லை. “மற்றவருடையது ஓஹோ, எங்களுடையது ஆஹா!” என்ற மாதிரி. “அவர்கள் போட்டால் கயறு வைத்த நிக்கர், நாங்கள் போட்டால் பெர்முடா!!” பைபிளின் “தெய்வவாக்கியங்களை” எடுத்து நுண்ணியமாக ஆராய்ந்தால் இவர்கள் முகமறைத்து ஓடவேண்டி வரும். அப்படிச் செய்ய விரும்பவில்லை என்றால் முதலில் இவர்களைத் திருத்தவோ, கட்டுப்படுத்தவோ தயார் ஆகுங்கள்.
“கிறிஸ்தவ மதத்தை அவமதிக்கிறீர்கள்” என்று கூச்சல் போடுகிறவர்களிடம் “நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டாம், அப்போதுதான் உங்களுக்கு தீர்ப்பளிக்கப்படாது; நீங்கள் அளந்த அளவிலேயே உங்களுக்கும் அளந்து கொடுக்கப்படும்” (மத்தேயு 7:1-3) என்ற இயேசுவின் வசனத்தையாவது சொல்லத் தயாராகுங்கள். அதற்கும் முடியவில்லை என்றால் தயவுசெய்து எங்களை மன்னியுங்கள்.
(தொடரும்)