சமீபத்தில் சிவகிரி மடத்தில் நடந்த மாநாட்டில், கேரளா மாநில முதல்வர் பினராய் விஜயன் அவர்கள் உரையாற்றும்போது, “சனாதன தர்மத்தை பின்பற்றுபவராகவோ செய்தி தொடர்பாளராகவோ ஸ்ரீ நாராயண குரு அவர்கள் இருந்தது இல்லை எனவும், அவரை சனாதனவாதியாக உருமாற்றும் முயற்சி நடந்து வருவதாகவும்” தெரிவித்தார்.
உடனே சி.பி.எம். கேரளா மாநிலச் செயலாளர் MV கோவிந்தன் அவர்களும், “சனாதன தர்மம் என்பது நிகழ்காலத்திற்கு கேடானது எனவும், அது வர்ணாசிரம தத்துவத்தை போதிப்பதாகவும்” தெரிவித்தார்.
சனாதான தர்மம் குறித்தோ அல்லது ஸ்ரீ நாராயண குரு குறித்தோ ஆரோக்கியமான விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனைப் பற்றி சில கேள்விகளை உங்கள் முன் முன்வைக்க விரும்புகிறேன்:
(1) கேரளா உட்பட உள்ள பரந்து விரிந்த இந்தியாவில் அதிகமான மக்கள் தொகையில் உள்ளவர்கள் இந்துக்களே. இந்து மதத்தின் மற்றொரு பெயரே “சனாதன தர்மம்”. மிக உயர்ந்தப் பொறுப்பில் உள்ளவர்கள், இதுபோல தரம் தாழ்ந்த கருத்துக்களை தெரிவிப்பது நியாயமானதா ?
பெரும்பான்மையான இந்துக்களால் வாக்களிக்கப்பட்டு, தேர்தலில் வெற்றி பெற்றதால் தான், நீங்கள் தற்போது இந்தப் பதவியில் தொடர்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் LDF கூட்டணிக்கு வாக்களித்த பெரும்பான்மையான இந்துக்கள் மிகுந்த இறை நம்பிக்கை கொண்டவர்கள்.
அரசு இடத்தில் நிறுவப்பட்ட சிலுவையை மாவட்ட ஆட்சியாளர் நீக்கிய போது நீங்கள் கூறியது என்னவென்றால், “சிலுவை என்பது கிறிஸ்தவர்களுக்கு மிகவும் புனிதமானது, அதனை நீக்கிய போது கிறிஸ்துவர்களின் மனம் எவ்வாறு புண்பட்டிருக்க வேண்டும் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்”. கிறிஸ்தவ மதத்திற்கு நீங்கள் காட்டும் அக்கறையைப் போலவே, சனாதன தர்மமான இந்து மதத்திற்கு மட்டும் ஏன் அவ்வாறு கரிசனம் காட்டவில்லை ?
இந்துக்களுக்கும் நீங்கள் தானே முதல்வர் ?
எல்லா இந்துக்களும் சங்பரிவாரில் உறுப்பினராகவா இருக்கிறார்கள்?
ஆளும் கட்சியின் மாநில செயலாளர் பகிரங்கமாகவே சனாதன தர்மத்தை இழிவாக விமர்சிக்கின்றார், இது போல பேசுவது தவறு என ஏன் நீங்கள் உணரவில்லை ? இந்துக்கள் மறுப்பு ஏதும் தெரிவிக்க மாட்டார்கள் என நினைத்து இருந்து விட்டீர்களா ? இந்துக்கள் குறித்து கடுமையாக விமர்சித்த மாநிலச் செயலாளர், வரும் உள்ளாட்சி, சட்டமன்றத் தேர்தலில் இந்துக்களை சந்தித்து ஓட்டு கேட்க வேண்டும் என்பதை மறந்து விட்டாரா ?
(2)இப்படி பேசுவதால் உங்கள் கட்சிக்கும், ஆட்சிக்கும் என்ன லாபம் கிடைத்து விடப் போகிறது ? யாரை திருப்திப்படுத்த அல்லது தாஜா செய்ய இவ்வாறு செய்கிறீர்கள் ?
(3)குறிப்பிட்ட மதத்தை மட்டும் இவ்வாறு கேலி செய்வது சரியா ? இது போல மற்ற மதத்தினரை கேலி செய்ய உங்களுக்கு தைரியம் உள்ளதா ?
ஸ்ரீ நாராயண குருவைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள அந்த இரண்டு கருத்துக்கள் விவாதிக்கப்பட வேண்டியது :
- ஸ்ரீ நாராயண குருவின் உபதேசங்கள் சனாதன தர்மத்துடன் எந்தவொரு தொடர்பும் இல்லாதது.
- சனாதன தர்மம் என்பது வர்ணாசிரம முறையில் இயங்குவது.
இதனைப் பற்றி கண்டிப்பாக விவாதம் செய்ய வேண்டும். அதைப் பற்றி பார்ப்போம்.
1) ஸ்ரீ நாராயண குருவின் உபதேசங்களும், செயல்பாடுகளும் சனாதன தர்மத்திற்கு தொடர்பு இல்லாததா ? ஒரு நபரின் செயற்பாடுகள் மூலமாகவே அவரை நாம் புரிந்துக் கொள்ள முடியும்.
ஸ்ரீ நாராயண குரு ஸ்தாபித்த கோவில்களும், அவர் உபதேசித்த கருத்துக்களும், சனாதன தர்மத்தின் வழியில் தான் இருந்தன. அவரது வாழ்க்கை முறையும் சனாதன தர்மத்தை சார்ந்து தான் இருந்தது.
முதல்வர் மற்றும் மாநிலச் செயலாளரின் கருத்துக்கள் மிகவும் தவறானவை. பிற்காலத்தில் உருவான அடிப்படைவாதிகளின் தத்துவங்களைப் போலவே, சனாதன தர்மத்தையும் நினைத்து விட்டீர்கள் !
சனாதன தர்மத்தைப் பற்றி பலருக்கும் தவறாக சித்தரிக்கப்பட்டது போல, நீங்களும் அதனை நம்பி தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்! உங்களைப் போலவே பலரும் இப்படித்தான் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்!
ஆனால் நாராயண குருவுக்கு “சனாதன தர்மம்” என்பது, “புனிதமான தத்துவம்”. “சனாதனம் என்றால் “பரமேஸ்வரன்”. “சனாதன தர்மம் என்றால் “ஈஸ்வரனால் அருளப்பட்டது” என நினைத்து வாழ்ந்தார்.
பள்ளத்துருத்தியில் நடந்த கடைசி SNDP கூட்டத்தில் “அனைவரும் சனாதன தர்மத்திற்கு வர வேண்டும்” என ஸ்ரீ நாராயண குரு கூறினார்.
தாய்மதம் திரும்புபவர்களை அவர் வரவேற்றார்.
“சனாதன தர்மமே அனைவரையும் ஒன்றுபடுத்தும் சக்தி” என்பதனை ஸ்ரீ நாராயண குரு உணர்ந்து இருந்தார், என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். குரு பரம்பரையை சேர்ந்ததே, சனாதன தர்மம் என்பதை உணர்ந்த ஸ்ரீ நாராயண குரு, “அனைவரையும் சனாதன தர்மத்திற்கு திரும்ப வலியுறுத்தினார்”.
1926 ஆம் ஆண்டில் பள்ளத்துருத்தியில் நடந்த கருத்தரங்கில் ஸ்ரீ நாராயண குரு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “சமூக சீர்திருத்தத்தில் ஈடுபாடு காட்டும் செயலைக் குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும், சில குறிப்பிட்ட சாதியை மட்டும் அதில் சேர்க்கக் கூடாது எனவும், தன் மதத்தை விட்டு மற்றொரு மதத்திற்கு மாறக் கூடாது எனவும், அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும் எனவும், எல்லோரும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும் எனவும், “ஒரே சாதி, ஒரே மதம், ஒரே கடவுள்” – அதுவே சனாதன தர்மம் எனவும், இதன் மீது நம்பிக்கை கொண்ட அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் எனவும், சனாதன தர்மம் மூலமாகவே பாகுபாடு தீர்க்கப்படும் எனவும்” விவரித்தார். (சுவாமி ஆர்சானந்தா பற்றி ஆசன் குமரன் எழுதிய வாழ்க்கை வரலாறு)
மலையாள மொழியில் மூர்கோத் குமரன் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூலில், குருவைக் குறித்து குறிப்பிடும் போது, “புனிதமான இந்து மதத்தின் மகன் ஸ்ரீ நாராயண குரு” என குறிப்பிடப்பட்டுள்ளது. (பக்கம் எண் – 79)
(தொடரும்…)