கணபதி: கற்பனையா அல்லது உண்மையா? – கஜமுக கணபதியைப்
கணபதிக்கு யானைத் தலை எப்படிக் கிடைத்தது?
கணபதி புராணக் கதைகளில் வரும் ஒரு மித்யை மட்டும்தானா!?
அல்லது கஜமுக கணபதிக்குப் பின்னால் ஆழமான ஆன்மீக சத்தியம் உள்ளதா?
ஒரு தாயும் தந்தையும் தங்கள் குழந்தைகளுக்கு கணபதியின் உருவத்திற்குப் பின்னுள்ள யதார்த்தத்தை விளக்கும் காணொளிக் காட்சியே இது.
கணபதியைச் சுற்றிப் பரவி வரும் குழப்பமூட்டும் புராணக் கதைகளையும் பாரம்பரிய ஆக்கியானங்களையும் ஆராயும்போது, சரி–தவறை பிரித்தறியும் ஞானம் அதாவது விவேகம் அவசியம் என்பதை இந்தக் காணொளி விளக்குகிறது.
கணபதியின் உண்மையான ஸ்வரூபங்களைப் பற்றி ஷிகள் கூறுவது
வேதங்களில் கணபதி – ஒருவரே, அத்விதீயரான பரமேஸ்வரனின் மற்றொரு நாமம்.
மூலகணபதி – காரண உலகின் மகாகணபதி; ஜோதி ஸ்வரூபமும் சச்சிதானந்த ஸ்வரூபமும் ஆன கணபதி.
கஜமுக கணபதி – கஜாசுரனையும் அனலாசுரனையும் சம்ஹாரம் செய்து உலகைக் காக்க பூமியில் பக்தர்களின் முன்னே பிரத்யக்ஷமான கணபதி.
இரண்யகசிபுவிடமிருந்து பிரகலாதனையும் உலகையும் காப்பதற்காக நரசிம்மமூர்த்தி
அவதரித்ததுபோல, தீமையிலிருந்து உலகைக் காப்பதற்காக கஜமுக கணபதியும் பூமியில் ஆவிர்பவித்தார்.
இந்த விநாயக சதுர்த்தியில், ஈஸ்வரனின் இயல்பிற்கு ஒவ்வாத கதைகளை கண்மூடித்தனமாக மீண்டும் கூறுவதற்குப் பதிலாக, நம் சனாதன தர்ம பாரம்பரியத்தின் ஆழமான ஞானத்தை கற்று, புரிந்து, பகிர்வோம்.
அசம்பந்தம் அல்ல, ஞானத்தையே நாம் பரப்ப வேண்டும்.
வெறும் ஆசாரங்களைப் பின்பற்றுவது அல்ல, நம் தர்மத்தைப் புரிந்துகொள்வதே அவசியம்.
அனைவருக்கும் இதயம் கனிந்த விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்!
ஓம் கம் கணபதயே நமः